நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் கீழ் இயங்கும் டபிள்யூடிஆர்ஏ ஏற்பாடு செய்த வெபினாரில் 120-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
Posted On:
21 NOV 2021 5:10PM by PIB Chennai
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை, இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் அடையாள வாரத்தைக் கொண்டாடி வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சேமிப்புக்கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெபினார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நபார்டு மற்றும் எஸ்எப்ஏசி ஆகியவற்றின் 120-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆணையத்தின் தலைவர் திரு ஹர்பிரீத் சிங், வெபினாரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சேமிப்பு கிடங்கு வசதிகளை மேம்படுத்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளும் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். இந்த அமைப்புகள் கூட்டு வர்த்தக மாதிரியைப் பின்பற்றி பயனடைய வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். சொந்த சேமிப்பு கிடங்குகள் இல்லாத இந்த அமைப்புகள், பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசின் சேமிப்பு கிடங்குகளை வாடகைக்கு எடுத்து, பயன்படுத்தி பலனடையலாம் என அவர் ஆலோசனை வழங்கினார்.
டபிள்யூடிஆர்ஏ-வில் பதிவு செய்து மின்னணு என்டபிள்யூஆர் பெற்று பயனடைவது பற்றிய விளக்கப்படம் வெபினாரில் காட்டப்பட்டது. வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு பதிவுக் கட்டணம், ரூ.5000 முதல் ரூ.30,000 வரையிலான மற்றவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ரூ.500 அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773737
----
(Release ID: 1773775)