சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி உரையாற்றவுள்ளார்
प्रविष्टि तिथि:
20 NOV 2021 1:07PM by PIB Chennai
இம்மாதம் 23 அன்று புதுதில்லியில் நடைபெறவுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள சுரங்கத் துறையை சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, துறையில் அதிக வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும், ‘எளிதாகத் தொழில் செய்வதற்கு’ உதவும் முக்கிய அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விவாதங்களை நடத்துவார்கள்.
நாட்டில் நடைபெறும் ஆய்வு நடவடிக்கைகள், ஏல முறை மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளை ஊக்குவிக்கும் பல குறிப்பிடத்தக்க பிரிவுகளை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான 5-வது தேசிய மாநாடு கொண்டிருக்கும். சுரங்கங்களின் செயல்திறனுக்கான 5-நட்சத்திர விருது வழங்கும் விழா இந்த ஒரு நாள் மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கு வெளிப்படையான மற்றும் காகிதமில்லா செயல்முறை மூலம் அங்கீகாரம் வழங்குவதற்கான இணையதளத்தையும் இந்த மாநாட்டின் போது அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773448
----
(रिलीज़ आईडी: 1773529)
आगंतुक पटल : 228