பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத் தலைமை தளபதி இஸ்ரேல் பயணம்

प्रविष्टि तिथि: 14 NOV 2021 9:52AM by PIB Chennai

ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, இஸ்ரேலில்  நாளை முதல் நவம்பர் 19ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். அவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறையாகும்

 

இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் நாட்டின் மூத்த ராணுவ  அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு, பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் ராணுவ மற்றும் உள்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா - இஸ்ரேல் இடையேயான சிறந்த ராணுவ கூட்டுறவை முன்னெடுத்து செல்வது குறித்து அவர் இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.  இஸ்ரேல் நாட்டின் முப்படை தளபதிகளுடன் கலந்துரையாடும் ஜெனரல் எம்.எம்.நரவானே, இஸ்ரேல் ராணுவத்தின் தலைமையகத்தையும் பார்வையிடுகிறார்.

****


(रिलीज़ आईडी: 1771653) आगंतुक पटल : 290
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu