வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகத்துக்கு இந்தியா மீண்டும் திரும்பியுள்ளதை இந்திய சர்வதேச வர்த்தக சந்தை(ஐஐடிஎப்) காட்டும் - திரு பியூஷ் கோயல்

Posted On: 14 NOV 2021 12:33PM by PIB Chennai

வர்த்தகத்துக்கு இந்தியா மீண்டும் திரும்பியுள்ளதை  இந்திய சர்வதேச வர்த்தக சந்தை(ஐஐடிஎப்)  காட்டும்  - மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

40வது சர்வதேச இந்திய வர்த்தக சந்தையை, மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில், இந்தியா உயர்ந்த நிலையில் உள்ளது. உலகளாவிய நுகர்வு சங்கிலியை பராமரிப்பதில், இந்தியாவை நம்பிக்கையான  கூட்டணி நாடாக உலக நாடுகள் கருதுகின்றன.  கொவிட்-19 முடக்க காலத்திலும், உலக சமுதாயத்துக்கான சேவை ஆதரவை இந்தியா குறைக்கவில்லை.

அன்னிய நேரடி முதலீட்டில், இதுவரை இல்லாத உயர்வை இந்தியா கண்டுள்ளது. முதல் 4 மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டு இதே கால அளவை விட 62 சதவீதம் அதிகம்.   வர்த்தகத்துக்கு இந்தியா மீண்டும் திரும்பியுள்ளதை இந்திய சர்வதேச வர்த்தக சந்தை நிருபிக்கும்.

பொருளாதாரம், ஏற்றுமதி, கட்டமைப்பு, தேவை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை இந்தியாவின் 5 சூத்திரங்கள். சிறந்த கட்டமைப்பு, சிறந்த வளர்ச்சிக்கான தேவை, வளர்ச்சியில் பன்முகத்தன்மை ஆகியவை பொருளாதார மறுமலர்ச்சியின் மையமாக மாறும்.

இந்திய சர்வதேச வர்த்தக சந்தை தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் உலகளாவிய தயாரிப்புக்கு குரல் கொடுக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கூறினார்.

****



(Release ID: 1771644) Visitor Counter : 184