நிதி அமைச்சகம்
ரூ 90 கோடி மதிப்புள்ள 12.9 கிலோ ஹெராயினுடன் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் 2 பேர் கைது
Posted On:
13 NOV 2021 7:43PM by PIB Chennai
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நைரோபியிலிருந்து (கென்யா) அபுதாபி வழியாக வந்த இரண்டு உகாண்டா நாட்டினரிடம் இருந்து 12.9 கிலோ ஹெராயினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2021 நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளின் இடைப்பட்ட இரவில். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு, நடைமுறையில் உள்ள சர்வதேச விலையின்படி தோராயமாக ரூ 90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கடத்தி வந்தவர்கள் உகாண்டா, கென்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வழியாகச் சென்றுள்ளனர். அவர்களின் செக்-இன் லக்கேஜின் போலியான அடிப்பகுதியில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த வருடத்தில் மட்டும் தில்லி சுங்கத்துறையினர் 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர். 26-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகள் வழித்தடத்தில் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வலுவான ஆய்வு மற்றும் சோதனையை இந்திய சுங்கத்துறை அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771521
****
(Release ID: 1771554)
Visitor Counter : 217