புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான வரிக்குப் பிந்தைய அரையாண்டு லாபத்தை ஐரேடா பதிவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
13 NOV 2021 10:57AM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐரேடா), 2021 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
2021-22-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ 684.80 கோடி மொத்த வருவாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் ரூ 110.27 கோடி ஆகும். இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான வரிக்குப் பிந்தைய அரையாண்டு லாபமாக ரூ 299.90 கோடியை ஐரேடா பதிவு செய்துள்ளது.
2021 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளுக்கு ஐரேடாவின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதோடு, நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை பாராட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1771383
***
(रिलीज़ आईडी: 1771463)
आगंतुक पटल : 201