சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
13 NOV 2021 9:13AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 111.40 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. .
கடந்த 24 மணி நேரத்தில் 11,850 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 12,403 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,26,483 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.40 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,36,308; இது 274 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.
தினசரி பாதிப்பு விகிதம் 0.94. இது கடந்த 40 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு விகிதம் 1.05 ஆகும். இது கடந்த 50 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 62.23 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771360
*****
(Release ID: 1771360)
(Release ID: 1771400)
Visitor Counter : 162