சுற்றுலா அமைச்சகம்
நாட்டின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்த இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் சுற்றுலா அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
12 NOV 2021 5:35PM by PIB Chennai
நாட்டின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதற்கான அதன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்துடன் (ஐஆர்சிடிசி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2021 நவம்பர் 10 அன்று சுற்றுலா அமைச்சகம் கையெழுத்திட்டது
ஈஸ் மை டிரிப், கிளியர்டிரிப், யாத்ரா.காம், மேக் மை டிரிப் மற்றும் கோஇபிபோ ஆகியவற்றுடன் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுற்றுலா அமைச்சகம் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது.
ஓடிஏ தளத்தில் சாத்தி (விருந்தோம்பல் துறைக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான அமைப்பு) மூலம் தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொண்ட தங்கும் இடங்களுக்கு விரிவான விளம்பரத்தை வழங்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.
நிதி மற்றும் சாத்தி அமைப்பில் பதிவு செய்து கொள்ள அவர்களை ஊக்குவித்து, கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உள்ளூர் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
தங்குமிடங்கள் குறித்த அதிக தகவல்களை அளித்து பாதுகாப்பான, கவுரவமான மற்றும் நீடித்த வசதிகள் கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பதை ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1771239&RegID=3&LID=1
****
(रिलीज़ आईडी: 1771282)
आगंतुक पटल : 240