சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
12 NOV 2021 9:23AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 110.79 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. .
கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.26 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 13,155 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,14,080 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.40 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,37,416; இது 267 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.
வாராந்திர பாதிப்பு விகிதம் 1.10. கடந்த 49 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 1.07 ஆகும். கடந்த 39 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 62.10 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771077
(Release ID: 1771125)
Visitor Counter : 194