சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாடு: மத்திய இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தலைமை தாங்கினார்

Posted On: 11 NOV 2021 4:48PM by PIB Chennai

வனங்களின் முதன்மை பாதுகாப்பாளர், வன பாதுகாப்பு படை தலைவர்களின் மாநாட்டுக்கு  மத்திய இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே இன்று தலைமை தாங்கினார். வனங்களில் உள்ள பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள்உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கருத்துக்கள் குறித்து ஆலோசிக்க இந்த மாநாட்டை சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்தியது.

வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வனங்களை மாற்றுவதற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதை ஒழுங்குபடுத்துவது, வனங்களுக்கு வெளியே மரங்களை அதிகரிப்பது, மரம் வளர்ப்பவர்களின் வருமானத்தை அதிகரிப்பது, நகர் வன திட்டத்தை அமல்படுத்துவது, நகர்புறங்களை பசுமையாக்குவது, ஆறுகளை புதுப்பிப்பது, வன ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது

எளிதாக தொழில் செய்வதற்கான அவசியமான விஷயங்கள், மரம் வளர்க்க மக்களை ஊக்குவிப்பது, சவால்களுக்கு ஏற்றபடி வனபாதுகாப்பு படையின் பணி சூழலை மாற்றுவது  போன்ற விஷயங்களில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். காடு வளர்ப்பு, வன மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் புதுமையான நடவடிக்கைகள் மற்றும் சிறந்த முறைகளை  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பின்பற்றும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770953

 

----



(Release ID: 1771018) Visitor Counter : 191