வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதி இலக்கை எட்ட இந்தியா தயாராக உள்ளது: திரு பியூஷ் கோயல்

Posted On: 09 NOV 2021 2:46PM by PIB Chennai

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதி இலக்கை எட்ட இந்தியா தயாராக உள்ளது என்று வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று கூறினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற 'சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்- சர்வதேச சேவைகள் மாநாடு 2021'-ல் உரையாற்றிய அவர்,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைகள் முக்கிய உந்து சக்தியாக இருப்பதாக கூறினார்.

சேவைத் துறையானது கிட்டத்தட்ட 2.6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகவும், இந்தியாவின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பதாகவும் அவர் கூறினார். 2020-21 நிதியாண்டில் சேவைகள் வர்த்தக உபரி $89 பில்லியன் என்றும், மிகப்பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் துறையாக இது உள்ளது என்றும் (2000-2021ல் 53% அந்நிய நேரடி முதலீடு) அவர் கூறினார்.

'சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்- சர்வதேச சேவைகள் மாநாடு 2021-ன் கருப்பொருள் இந்தியா சேவைகள்: தகவல் தொழில்நுட்பம்/அதை சார்ந்த சேவைகளுக்கு அப்பால் சாத்தியமான வளர்ச்சித் துறைகளை ஆராய்வது' ஆகும்.

பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் ரூ. 56,027 கோடி வெளியிடப்பட்டுள்ளது என்றும் எஸ் எஸ்-ன் கீழ் ரூ 10,002 கோடி வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

உலகின் சிறந்த சேவைகள் ஏற்றுமதியாளராக இந்தியா உருவாக வாய்ப்பு உள்ளது என்று கூறிய திரு கோயல்

, அறிவு சார்ந்த பொருளாதாரமாக இந்தியா மாறுவதை சேவைகள் ஊக்குவிக்கிறது என்றார்.

மேலும் பேசிய அமைச்சர், இந்தியா 'பின்னணி அலுவலகமாக' (பேக் ஆபிஸ்) இருந்து உலகின் 'மூளை அலுவலகமாக' (பிரெய்ன் ஆபிஸ்) மாறியுள்ளது என்றார்.

மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770270 

******



(Release ID: 1770396) Visitor Counter : 239