அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள கிமினில் வடகிழக்கு பழங்குடியினருக்கான புதிய பயோடெக்னாலஜி மையத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
Posted On:
09 NOV 2021 2:26PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள கிமினில் வடகிழக்கு பழங்குடியினருக்கான புதிய உயிரி தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று திறந்து வைத்தார்.
மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த "உயிரி வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி மையம்" பெரிதும் உதவும் என்றார் அவர். உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி உள்ளூர் உயிரி வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையாகப் பயன்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்ப துறையின் ஆதரவை இது பெற்றுள்ளது என்றார்.
திரு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து, இந்தியாவின் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கும், பழங்குடியினரின் மேம்பாட்டிற்கும் சிறப்பு முன்னுரிமை அளித்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில், விவசாயம், நீர் மின்சாரம், உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு புதிய வழிகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
பிராந்தியத்தின் நன்மைக்காக பின்வரும் மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் மையம் கவனம் செலுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்- (i) முன்னணி ஆர்ச்சிட் வகைகளை பாதுகாப்பதற்காக கிமினில் அதி நவீன மையம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் அலகுகள், (ii) அருணாச்சலப் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் வாழை நார் பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்க பிரிவுகளை நிறுவுதல், மற்றும் (iii) நறுமணப் பயிர்கள் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அரோமா அலகு நிறுவுதல்.
இந்தத் திட்டத்தின் மூலம் (1) மாணவர் பயிற்சித் திட்டம், (2) தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் (TTP), (3) ஆசிரியப் பயிற்சித் திட்டம் மற்றும் (4) தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு வகையான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770268
*********
(Release ID: 1770394)
Visitor Counter : 238