குடியரசுத் தலைவர் செயலகம்
2021-க்கான பத்மவிருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
09 NOV 2021 1:58PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இன்று காலை (நவம்பர் 9, 2021) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிவில் விருது வழங்கும் விழா-1ல் வழங்கினார்.
குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இது 2021ஆம் ஆண்டுக்கான விருதுகளின் முதல் தொகுப்பாகும், இரண்டாம் தொகுப்பு விருதுகள், இன்று மாலை நடைபெறும் சிவில் விருதுகள் வழங்கும் விழா-2ல் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770264
***
(Release ID: 1770315)