அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியா முழுவதிலும் இருந்து 17 விஞ்ஞானிகளுக்கு ஸ்வர்ணஜெயந்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

Posted On: 08 NOV 2021 5:02PM by PIB Chennai

இந்தியா முழுவதிலும் உள்ள அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த பதினேழு விஞ்ஞானிகளுக்கு அவர்களின் புதுமையான ஆராய்ச்சி யோசனைகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தாக்கத்தை உருவாக்கும் திறனுக்காக ஸ்வர்ணஜெயந்தி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சித் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகளுக்குள் சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் தடையற்ற ஆராய்ச்சியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள். நிரூபிக்கப்பட்ட சாதனை வரலாற்றை கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் கடுமையான மூன்று அடுக்கு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னணி பகுதிகளில் அடிப்படை ஆராய்ச்சியைத் தொடர்வார்கள்.

இந்தியாவின் ஐம்பதாம் ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஸ்வர்ணஜெயந்தி திட்டம் அரசால் நிறுவப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விருது பெற்றவர்களுக்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ 25,000 ஊக்கத்தொகை உட்பட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஆதரவளிக்கப்படுகிறது.

கூடுதலாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விருது பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ரூபாய் ஆராய்ச்சி மானியம் வழங்கப்படுகிறது. அவர்களது நிறுவனத்தில் இருந்து அவர்கள் பெறும் சம்பளத்துடன் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதை தவிர, உபகரணங்கள், கணக்கீட்டு வசதிகள், நுகர்பொருட்கள், தேசிய மற்றும் சர்வதேச பயணம் மற்றும் பிற சிறப்புத் தேவைகள் உள்ளிட்டவற்றுக்கான மானியங்களும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770038

****(Release ID: 1770071) Visitor Counter : 218