குடியரசுத் தலைவர் செயலகம்
தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
03 NOV 2021 4:50PM by PIB Chennai
தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"தீபாவளி புனிதத் திருநாளை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் நமது மக்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமையை எதிர்த்து நன்மை வென்றதையும் இருளை எதிர்த்து ஒளி வென்றதையும் தீபாவளி குறிக்கிறது. நமது சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் மக்களால் இப்பண்டிகை பெரிதும் கொண்டாடப்படுகிறது. பரஸ்பர அன்பு, நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் செய்தியை தீபாவளி புனித பண்டிகை வழங்குகிறது. உண்மையில், நமது வளம் மற்றும் மகிழ்ச்சியை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு இது.
இந்த பண்டிகையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூய்மையுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க உறுதி ஏற்போம்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
*********
(Release ID: 1769299)
Visitor Counter : 184