சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஹஜ் 2022 குறித்த அறிவிப்பை மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்டார்

Posted On: 01 NOV 2021 3:00PM by PIB Chennai

இன்று (2021 நவம்பர் 1) முதல் ஹஜ் 2022-க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்குகிறது என்று மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார். 2022 ஜனவரி 31 வரை இது நடைபெறும்.

மும்பையிலுள்ள ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹஜ் 2022 நடைபெறுவதாக கூறினார்.

இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசிகள் மற்றும் ஹஜ் 2022-ன் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்திய, சவுதி அரசுகளால் வகுக்கப்படும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஹஜ் பயணிகள் தேர்வு நடைபெறும் என்றார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஹஜ் பயணிகளுக்கு இந்தியாவில் இருந்து அவர்கள் கிளம்பும் இடங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை மற்றும் இ-மசிஹா வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஒட்டுமொத்த செயல்முறையும் எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக ஆக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768481

****



(Release ID: 1768686) Visitor Counter : 211