ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘‘மலிவு மற்றும் புதுமை: அனைவருக்கும் தரமான மருந்துகளை உறுதி செய்தல்’’ பற்றிய இணைய கருத்தரங்கு : பேராசிரியர் கே.விஜய் ராகவன் தலைமை தாங்கினார்

Posted On: 31 OCT 2021 1:10PM by PIB Chennai

இந்திய விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக,  ‘‘மலிவு மற்றும் புதுமை: அனைவருக்கும் தரமான மருந்துகளை உறுதி செய்தல்’’ பற்றிய இணைய கருத்தரங்கை, நேற்று காணொலி காட்சி மூலம் மருந்து துறையின் கீழ் உள்ள தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (NPPA)  நடத்தியது. இதற்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்  பேராசிரியர் கே. விஜய் ராகவன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய கே.விஜய் ராகவன்பருவநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இந்திய மருந்து துறையின் அவசியத்தை வலியுறுத்தினார். புதிய மருந்துகளுக்கான கண்டுபிடிப்புக்கு உந்துதல் அளிக்க தொழில் துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஆய்வு பணியின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

மருந்துகள் துறையின் செயலாளர் திருமிகு. எஸ்.அபர்னா பேசுகையில், நோயாளிகளுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.  உயிரியல், மரபணு செல் சிகிச்சை, சிக்கலான மரபியல் மற்றும் எதிர்கால மருந்துகள் ஆகியவற்றின் திறன்களில்   புதுமையை ஏற்படுத்த உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) மூலம் அரசு ஆதரவு அளிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768071

 

****


(Release ID: 1768182) Visitor Counter : 235
Read this release in: English , Urdu , Hindi , Telugu