தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மகாராஷ்ட்ர சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல் தொடர்பாக

Posted On: 31 OCT 2021 1:15PM by PIB Chennai

மகாராஷ்ட்ர சட்ட மேலவை உறுப்பினர் திரு சரத் நாம்தேவ் ரான்பைஸ் 23.9.2021 அன்று மரணமடைந்ததை அடுத்து அந்தப் பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மேலவை உறுப்பினரைத்   தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாள்

9 11 2021 (செவ்வாய்)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

16.11. 2021(செவ்வாய்)

வேட்பு மனுக்கள் பரிசீலனை

17.11. 2021 (புதன்)

வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாள்

22.11.2021 (திங்கள்)

தேர்தல் தேதி

29.11.2021 (திங்கள்)

வாக்குப்பதிவு நேரம்

 

காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை

வாக்குகள் எண்ணிக்கை

29.11.2021 திங்கள் மாலை 5 மணி

 

தேர்தல் தொடர்பான பணிகள் 1.12. 2021 புதன் கிழமைக்கு முன்னதாக நிறைவு செய்யப்படும்

 

இந்த இடைத்தேர்தலில் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக்  கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மூத்த அதிகாரி ஒருவரைப் பணியமர்த்துமாறு மகாராஷ்ட்ர மாநிலத் தலைமை செயலாளருக்குத்   தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768075

****


(Release ID: 1768171) Visitor Counter : 239