நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் சுகாதார காப்பீடு மக்களுக்கு சென்றடைவதில் உள்ள இடைவெளிகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது

Posted On: 29 OCT 2021 3:38PM by PIB Chennai

சுகாதார காப்பீடு மக்களுக்கு சென்றடைவதில் உள்ள இடைவெளிகள் மற்றும் அவற்றை நிரப்புவதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த் மற்றும் கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

சுகாதார காப்பீடு அனைவருக்கும் செய்யப்பட வேண்டிய அவசியத்தை அறிக்கையின் முன்னுரையில் வலியுறுத்தி இருந்த ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், "சுகாதார காப்பீட்டின் ஊடுருவலை அதிகரிக்க குறிப்பிடத்தக்க சவால்களை கடக்க வேண்டும்," என்று கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த முயற்சியில் அரசும் தனியார் துறையும் ஒன்றிணைய வேண்டும்,” என்றார்.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த் கூறுகையில், “இந்த அறிக்கையானது ஆரோக்கியத்திற்கான நிதிப் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் சுகாதார காப்பீடு அனைவரையும் சென்றடைவதை ஊக்குவிக்கும் முயற்சியாகும். தற்போதுள்ள இடைவெளிகளை இது கோடிட்டுக் காட்டுவதோடு, பரிந்துரைகளை வழங்கி பாதைகளை காட்டுகிறது,” என்றார்.

அனைவருக்கும் சுகாதார காப்பீட்டை உறுதி செய்வதற்கான ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களுக்கு விரிவான மருத்துவமனைக் காப்பீட்டை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767498

****


(Release ID: 1767719) Visitor Counter : 287