பாதுகாப்பு அமைச்சகம்

சண்டிகரில் உள்ள டிஆர்டிஓவின் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்

Posted On: 28 OCT 2021 4:12PM by PIB Chennai

சண்டிகரில் உள்ள டிஆர்டிஓவின் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தை (டிபிஆர்எல்) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 அக்டோபர் 28 அன்று பார்வையிட்டார். 

பல்முனை கையெறி குண்டு போன்ற டிபிஆர்எல்-ஆல் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள், ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதற்கான அரசின் லட்சியத்தை பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

தனியார் துறையின் துடிப்பான பங்கேற்பு, நாட்டின் ராணுவ மற்றும் பொருளாதார வலிமையை தன்னிறைவை நோக்கி முன்னேற்றுகிறது என்று கூறிய அவர்,

தொழில்நுட்ப முன்கணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதிநவீன உற்பத்தி மற்றும் சோதனை திறன்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு, அதே சமயம் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார். ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் நாட்டின் வளர்ந்து வரும் திறனுக்கான குறிகாட்டிகளாக சமீபத்திய முன்னேற்றங்களை அமைச்சர் விவரித்தார்.

 

தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர்  மேலும் கூறினார்.

உலகம் முழுவதும் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலை குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட திரு ராஜ்நாத் சிங், அறிவியல் திறன்களின் அதிகரிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பாதுகாப்பு துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். அத்தகைய சூழ்நிலையில் இருந்து எழும் எந்த சவாலையும் சமாளிக்க எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கூறிய 'இந்த உலகில், பயத்திற்கு இடமில்லை. வலிமை மட்டுமே வலிமையை மதிக்கிறது,” என்ற பிரபல வாசகத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767199

***



(Release ID: 1767327) Visitor Counter : 215