எரிசக்தி அமைச்சகம்

தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் (என்எச்பிசி) 2021-ஆம் நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகை ரூ249.44 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியது

Posted On: 26 OCT 2021 2:08PM by PIB Chennai

தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் (என்எச்பிசி)  2021-ஆம் நிதியாண்டுக்கான  இறுதி ஈவுத்தொகை ரூ 249.44 கோடியை மத்திய அரசுக்கு கடந்த 21-ம் தேதி  வழங்கியது. இந்த்த் தொகையை என்எச்பிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு ஏ கே சிங், மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்கிடம் ஒப்படைத்தார்.

மேலும், இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.890.85 கோடி கடந்த மார்ச் 5-ம் தேதி வழங்கப்பட்டது.  மொத்தம் இதுவரை ரூ.1,140.28 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 35 பைசா ஈவுத்தொகை வழங்க இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கடந்த ஜூன் மாதம்  10-ம் தேதி நடந்த கூட்டத்தில் பரிந்துரைத்தனர்.  மேலும் இடைக்கால நிவாரணமாக ஒரு பங்குக்கு ரூ.1.25  கடந்த மார்ச்  5-ம் தேதி வழங்கப்பட்டது.  மொத்தம் ஒரு பங்குக்கு ரூ.1.60 ஈவுத்தொகை வழங்கப்பட்டது. என்எச்பிசி நிறுவனத்திற்கு தற்போது 7 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர்.  இவர்களுக்கு மொத்த ஈவுத்தொகையாக 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.1,607.21 கோடி செலுத்தப்பட்டது.

என்எச்பிசி நிறுவனம் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.3,233.37 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

-------- 



(Release ID: 1766717) Visitor Counter : 468