சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதுப்பிக்கப்பட்ட காசநோய் எதிர்வினைக்கான சர்வதேச சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பகுதிக்கான உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் டாக்டர் பாரதி பவார் உரையாற்றினார்

Posted On: 26 OCT 2021 12:02PM by PIB Chennai

புதுப்பிக்கப்பட்ட காசநோய் எதிர்வினைக்கான சர்வதேச சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியப் பகுதிக்கான உயர்மட்ட கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பவார் இன்று உரையாற்றினார்.

நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர், அனைத்து ஆறு பிராந்தியங்களிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலேயே காசநோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது என்று கூறினார். "பல நூற்றாண்டுகளாக இறப்புகளின் முக்கிய ஆதாரமாக இது இருந்து வருகிறது, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் மலேரியாவை தற்போது இது தாண்டியுள்ளது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை 15-45 வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கும் இளைஞர்களிடையே ஏற்படுகின்றன, இதன் விளைவாக அதிக பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

காசநோய் மீது கொவிட்-19-ன் தாக்கத்தை எடுத்துரைத்த அவர், “கொவிட் பெருந்தொற்று மனித உயிர்கள், பொருளாதாரங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் பல ஆண்டுகால முன்னேற்றத்தை ஒரு சில மாதங்களில் கொரோனா மாற்றியுள்ளது,” என்றார்.

மேலும் பேசிய அவர், காசநோய் ஒழிப்பு முயற்சிகளுக்கு உதவும் பெரிய அளவிலான கற்றல்களையும் பெருந்தொற்று நமக்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.

காசநோய் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவை பொருத்தவரை, 2020-ம் ஆண்டில் 43 சதவீதம் உள்நாட்டு ஆதாரங்களிலிருந்து வழங்கப்பட்டுள்ளது அரசியல் அர்ப்பணிப்பின் விளைவு என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766525

-----



(Release ID: 1766701) Visitor Counter : 196