ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 100 இந்திய ஜவுளி இயந்திரச் சாம்பியன்களை உருவாக்கும் நேரம் இது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 24 OCT 2021 1:27PM by PIB Chennai

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 100 இந்திய ஜவுளி இயந்திரச் சாம்பியன்களை உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப இடைவெளி மற்றும் ஜவுளி இயந்திரத் தயாரிப்பாளர்களுக்கு முன்னோக்கிய வழிஎன்ற தலைப்பில், ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

வேகம், திறன் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு, புதுமையானக் கூட்டுறவை ஏற்படுத்துவது ஆகியவற்றில் ஜவளித்துறை கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 100 இந்திய ஜவுளி இயந்திரச் சாம்பியன்களை உருவாக்க வேண்டும்.  ஜவுளித்துறை துடிப்புடன் செயல்பட ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் அதிகார மனப்பான்மையிலிருந்து வெளியேறி, நவீனமாகச் செயல்படும் நிலைக்கு மாற வேண்டும். ஜவளி இயந்திரங்கள் தயாரிப்பில், உலகின் முன்னணி நாடாக இந்தியா பார்க்கப்பட வேண்டும். உலகம் எதிர்பார்க்கும் தரத்துடன் அதிகளவில் ஜவுளி இயந்திரங்களை உருவாக்க வேண்டும்.  நாங்கள் இறக்குமதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஜவுளி பொறியியல் தொழில் துறை மற்றும் அரசு இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளால், ஜவுளி இயந்திரங்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். தரத்தில் கவனம் செலுத்துவது சந்தையை மிகப் பெரிய அளவில் பிடிக்கவும், அதிகளவிலான உற்பத்திக்கும் உதவும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1766105

 


(Release ID: 1766145) Visitor Counter : 257