சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 23 OCT 2021 9:31AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை ‘ஒரு பில்லியன்’ (101.30 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.  .

கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.16 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 17,677 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,32,126 என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.51 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,73,728; இது 233 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.24 சதவீதம்) கடந்த 29 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.24 சதவீதம்) கடந்த 29 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 59.84 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765878

****



(Release ID: 1765878)



(Release ID: 1765945) Visitor Counter : 152