இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாணக்கியபுரி நேரு பூங்காவில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர்கள் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 22 OCT 2021 3:58PM by PIB Chennai

நாடு முழுவதும் நடைபெற்று வரும் தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சாணக்கியபுரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் நலத் துறை செயலாளர் திருமிகு உஷா ஷர்மா மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர் திருமிகு சுஜாதா சதுர்வேதி ஆகியோர் தன்னார்வலர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு திருமதி உஷா ஷர்மா தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழியை ஏற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய திருமிகு உஷா சர்மா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலன்  துறை, விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 1 முதல் 31 வரை நாடு தழுவிய தூய்மை இந்தியாத் திட்டத்தை நடத்துகிறது என்றார்.

நேரு யுவ கேந்திர சங்கத்துடன் இணைந்த இளைஞர் அமைப்புகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட இணைப்பு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களின் 6 லட்சம் கிராமங்களில்  நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்த மெகா முயற்சியின் மூலம், மக்களின் ஆதரவு மற்றும் தன்னார்வ பங்களிப்புடன் 75 லட்சம் கிலோ கழிவுகள், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை, அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765732 

------


(रिलीज़ आईडी: 1765781) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi