உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

Posted On: 18 OCT 2021 3:44PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை 2021 அக்டோபர் 20-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த வாரம் முதல் செயல்படவிருக்கும் சர்வதேச விமான நிலையம் முந்தைய காலத்தின் நெரிசலான போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் இந்தியாவில் சர்வதேச புத்தமத யாத்ரீகர்களின் விமானப்பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். முதல் விமானம் இலங்கையிலிருந்து 125 தலைவர்கள் மற்றும் புத்தபிட்சுகளுடன் குஷிநகர்  விமானநிலையத்தில் தரையிறங்கும். இது உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தினர், புத்தரின் மகாபரிநிர்வாண ஸ்தலத்தை பார்வையிடும் வசதியை அளிக்கும்.

குஷிநகர் விமான நிலையத் தொடக்கம், இப்பகுதியில் உள்ள பல புத்தமத இடங்களுக்கான தடையற்ற இணைப்பை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களுக்கு வழங்கும். தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமான இணைப்பு இலங்கை, ஜப்பான், தைவான், தென்கொரியா, சீனா, தாய்லாந்து. வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு குஷிநகர் வருவது எளிதாகும் என்பதோடு, இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தை அறிமுகம் செய்து வைக்கும்.  இந்த விமானத்  தொடக்கம் மூலம் சுற்றுலா 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது இந்தியாவை புத்த சமய மையமாக உருவாக்கவும், புத்தமதக் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பவும் வழிவகுக்கும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764675

------



(Release ID: 1764725) Visitor Counter : 178