குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு

Posted On: 17 OCT 2021 5:40PM by PIB Chennai

இந்தியாவின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தேசிய மதிப்பை நிலை நாட்டவும் அவற்றின் பெருமைகளை இளைஞர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பன்முக கலாச்சாரம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அப்பாலும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றலை படைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக ஹரியானா ஆளுநர் திரு பன்டாரு  தத்தாத்ரேயா ஏற்பாடு செய்திருந்த “அலை பலாய்” என்ற கலாச்சார நிழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு  கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கியஸ்தர்களும், அரசியல் கட்சி தலைவர்களும்   பங்கேற்று பரஸ்பரம் தங்களது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர். நாட்டு மக்கள் இடையே நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்த பல ஆண்டுகளாக இது போன்ற கலாச்சார நிகழ்ச்சியை முன்னெடுத்து வரும் திரு பன்டாரு தத்தாத்ரேயாவை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

ஸ்வராஜ் இயக்கத்தின் போது மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு.பால கங்காதர திலகர் மக்களை ஒன்றிணைப்பதற்காக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை துவக்கியத்தை திரு வெங்கையா நாயுடு நினைவு கூர்ந்தார். நமது மாபெரும் தலைவர்களின் பாரம்பரியத்தை மதித்து நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பாதுகாக்க அவர்களது வாழ்க்கையிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் திரு பன்டாரு தத்தாத்ரேயா , ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, தெலங்கானா உள்துறை அமைச்சர் திரு மொகம்மத் மெஹமோத் அலி, திரைப்பட நடிகர்கள் திரு பவன் கல்யாண், திரு மஞ்சு விஷ்ணு, டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு ஜீ.வீ. பிரசாத், பாரத் பையோடெக் நிறுவனத்தின் தலைவரும் இயக்குனருமான திரு கிருஷ்ணா எல்லா, ஆசிய கேஸ்ட்ரோ எண்ட்ரோலாஜீ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி, பையோலாஜிக்கள்-ஈ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி மகிமா தட்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.  

******



(Release ID: 1764576) Visitor Counter : 576