நிதி அமைச்சகம்
வருமான வரித்துறை மகாராஷ்டிராவில் நடத்திய சோதனையில் ரூ 184 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு
प्रविष्टि तिथि:
15 OCT 2021 3:18PM by PIB Chennai
மும்பையின் இரண்டு ரியல் எஸ்டேட் வணிகக் குழுமங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சில தனிநபர்கள்/ நிறுவனங்களில் வருமான வரித் துறை தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2021 அக்டோபர் 7 அன்று தொடங்கிய தேடுதல் நடவடிக்கைகள் மும்பை, புனே, பாரமதி, கோவா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பரவியிருக்கும் சுமார் 70 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டன.
கணக்கில் வராத மற்றும் பினாமி பரிவர்த்தனைகளை தேடலின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இரு குழுமங்களிலும் ரூ 184 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நிறுவனங்கள் மூலம் மோசடியான வழிகளில் பண பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள செல்வாக்கு மிக்க குடும்பம் ஒன்று இதில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வழியில் வந்த பணத்தின் மூலம் மும்பையின் முக்கிய இடத்தில் அலுவலக கட்டிடம், தில்லியின் ஆடம்பர பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று, கோவாவில் ரிசார்ட், மகாராஷ்டிராவில் விவசாய நிலங்கள் வாங்கியிருப்பதும், சர்க்கரை ஆலைகளில் முதலீடுகள் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ 170 கோடி ஆகும்.
கணக்கில் வராத ரூ 2.13 கோடி பணம் மற்றும் ரூ 4.32 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764158
****
(रिलीज़ आईडी: 1764225)
आगंतुक पटल : 248