சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் 8 தேசிய தலைநகர் பகுதி மாவட்டங்களில் நெல் கழிவுகள் எரிப்பு கணிசமாக குறைந்துள்ளது
प्रविष्टि तिथि:
15 OCT 2021 1:42PM by PIB Chennai
அறுவடை காலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி குறைப்பதற்காக, தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கான காற்று தர மேலாண்மை ஆணையம் 2021 செப்டம்பர் 15 முதல் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் 8 தேசிய தலைநகர் பகுதி மாவட்டங்களில் நெல் கழிவுகள் எரியும் நிகழ்வுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆணையத்திற்காக இஸ்ரோ உருவாக்கிய நெறிமுறையின் அடிப்படையில், நெல் கழிவுகள் எரியும் நிகழ்வுகள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது பஞ்சாபில் 69.49 சதவீதம், ஹரியானாவில் 18.28 சதவீதம் மற்றும் உத்தரபிரதேசத்தின் 8 தேசிய தலைநகர் பகுதி மாவட்டங்களில் 47.61 சதவீதம் குறைந்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஒரு மாத காலத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பதிவான மொத்த எரியும் நிகழ்வுகள் 1286 ஆகவும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இது 4216 ஆகவும் இருந்தது. இதேபோல், ஹரியானாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 596 நிகழ்வுகளும், இந்தாண்டு 487-ம் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் எட்டு என்சிஆர் மாவட்டங்களில், இந்த வருடம் 22-ம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 42-ம் பதிவாகின. தில்லி மற்றும் ராஜஸ்தானின் இரண்டு என்சிஆர் மாவட்டங்களில் எந்தவொரு நிகழ்வும் பதிவாகவில்லை.
பஞ்சாப் மாநிலத்தில் நெல் கழிவுகள் எரிக்கப்படும் முக்கிய இடங்கள் அமிர்தசரஸ், டார்ன் தரன், பாட்டியாலா மற்றும் லூதியானா ஆகும். இந்த நான்கு மாவட்டங்களில் 72 சதவீதம் குப்பை எரிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல், ஹரியானாவின் முக்கிய ஹாட்ஸ்பாட்களா கர்னால், கைத்தல் மற்றும் குருக்ஷேத்ரா உள்ளன. இந்த 3 மாவட்டங்கள் குப்பை எரிக்கும் நிகழ்வுகளில் 80 சதவீதத்திற்கு பொறுப்பேற்கின்றன.
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுகளுடன் தினசரி அடிப்படையில் செயல் திட்டத்தை உறுதிப்படுத்துவதையும் நெல் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டமைப்பையும் ஆணையம் உறுதி செய்கிறது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764141
***
(रिलीज़ आईडी: 1764215)
आगंतुक पटल : 258