சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 15 OCT 2021 9:48AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 97.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.07 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 19,391 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,33,82,100 என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் தற்போது 0.60 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,03,678; கடந்த 216 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.42 சதவீதம்) கடந்த 112 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.43 சதவீதம்) கடந்த 46 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 58.88 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


(Release ID: 1764185) Visitor Counter : 166