குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தசராவை முன்னிட்டு குடியரசு தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 OCT 2021 6:16PM by PIB Chennai

தசராவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய தசமி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் சக குடிமக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றததை குறிக்கும் வகையில் விஜய தசமி கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், நன்மை மற்றும் நல்லொழுக்கத்தின் வழியைப் பின்பற்ற இந்த விழா நம்மைத் தூண்டுகிறது. பகவான் ராமரின் ஆளுமையும் மரியாதை புருஷோத்தமராக அவரது நீதியான செயல்பாடும் நம் அனைவருக்கும் ஏற்றதாகும்.

சமுதாயத்தின் நன்னெறி அடித்தளத்தை இந்த பண்டிகை வலுப்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்ப உழைப்பதற்கு அனைத்து மக்களையும்  ஊக்குவிக்கட்டும்,” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1764009) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi