நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உலக தர நிர்ணய தினத்தை பிஐஎஸ் கொண்டாடுகிறது

Posted On: 14 OCT 2021 2:41PM by PIB Chennai

உலக தர நிர்ணய தினத்தையொட்டி, இந்திய தரநிலைகள் அலுவலகம் (பிஐஎஸ்) புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான ‘சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட பார்வை’ என்ற தலைப்பில் ஒரு நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு அஷ்வின் குமார் சௌபே நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தரப்படுத்தல் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் முக்கியத்துவத்தையும், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை தரநிலை செயல்படுத்துதல் எவ்வாறு வழங்குகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

எதிர்கால ஸ்மார்ட் நகரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் புதுமைகளின் இயங்குதிறனை உறுதி செய்வதில் தரநிலைகள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து அவர் பேசினார்.

பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்வதற்கான பாதை ஒரு முழுமையான தேவையாகிவிட்டது, பொருத்தமான, வேகமான மற்றும் சிறந்த தரநிலைகள் அதற்கு அவசியம் என்று அவர் கூறினார். 

சிறப்புரையாற்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி லீனாநந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி பாடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நுகர்வோர் விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திருமதி நிதிகாரே சிறப்புரை வழங்கினார். தரங்களின் முக்கியத்துவம் மற்றும் வணிகம், சமூகம் மற்றும் அரசாங்கத்திற்கு அவை அளிக்கும் நன்மைகள் பற்றி அவர் பேசினார்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763879

****



(Release ID: 1763979) Visitor Counter : 232