பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவ குழு அமெரிக்கா பயணம்

Posted On: 14 OCT 2021 10:10AM by PIB Chennai

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியின் 17-வது பதிப்பான "எக்ஸ் யுத் அபியாஸ் 2021"-ல் பங்கேற்பதற்காக  எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா (அமெரிக்கா) கூட்டு தளத்திற்கு இந்திய ராணுவ குழு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 2021 அக்டோபர் 15 முதல் 29 வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 350 வீரர்களை கொண்ட இந்திய குழு 2021 அக்டோபர் 14 அன்று அமெரிக்கா புறப்பட்டது.

இரு நாடுகளாலும் இணைந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சியின் 17-வது பதிப்பு இதுவாகும்.

இதற்கு முந்தைய பதிப்பு 2021 பிப்ரவரியில் ராஜஸ்தானின் பிகானெரில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பின் மற்றுமொரு முன்னேற்றமாக இது விளங்குகிறது.

இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது. குளிர் பருவ நிலைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்த பகிர்தல்கள் மற்றும் ஒரு தரப்பின் சிறந்த செயல்முறைகளை மற்றொரு தரப்பு கற்று கொள்ளுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும். 48 மணி நேர மதிப்பிடுதலுக்கு பின்னர் இப்பயிற்சி நிறைவுறும்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763787

 

*******(Release ID: 1763892) Visitor Counter : 203