சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 13 OCT 2021 9:31AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 96.43 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 15,823 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.06 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 22,844 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,42,901 என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ். தற்போது 0.61 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,07,653; கடந்த 214 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.46 சதவீதம்) கடந்த 110 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.19 சதவீதம்) கடந்த 44 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 58.63 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

****



(Release ID: 1763555) Visitor Counter : 34