ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 750 இடங்களில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2021 2:34PM by PIB Chennai

பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 750 இடங்களில் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்கள் 10.10.2021 அன்று நடைபெற்றன. இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முகமையான இந்திய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் குழுவின் மூலம் இந்த விழாக்கள் நடைபெற்றன.

முழு நாள் நிகழ்ச்சிகளில் சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டதோடு, 75 வயதிற்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு முதலுதவி பெட்டிகள் விலையின்றி வழங்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் சுகாதார பரிசோதனை முகாம்களில் கலந்துகொண்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்ஷுக் மண்டாவியா, கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1763308) வருகையாளர் எண்ணிக்கை : 345
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam