ரெயில்வே அமைச்சகம்
‘திரிசூல்’ மற்றும் ‘கருடா’ ஆகிய இரண்டு நீள சரக்கு ரயில்களை ரயில்வே வெற்றிகரமாக இயக்கியது
Posted On:
10 OCT 2021 11:39AM by PIB Chennai
‘திரிசூல்’ மற்றும் ‘கருடா’ ஆகிய இரண்டு நீள சரக்கு ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே மூலம் இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியது.
177 பெட்டிகளுடன் கூடிய மூன்று சரக்கு ரயில்களை முதல் முறையாக ஒன்றாக இணைத்த தெற்கு மத்திய ரயில்வே (எஸ்சிஆர்), அதை நீளமான ஒரே சரக்கு ரயிலாக இயக்கியது. “திரிசூல்” என்று பெயரிடப்பட்ட இந்த ரயில், மூன்று ரயில்கள் ஒன்றாக இயக்கப்பட்டதை குறிக்கிறது.
விஜயவாடா பிரிவில் இருந்து தெற்கு மத்திய ரயில்வேயின் குர்தா பிரிவு வரை இது 2021 அக்டோபர் 7 அன்று இயக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இதே போன்றதொரு ரயிலை கருடா எனும் பெயருடன் ராய்ச்சூரில் இருந்து மனுகூரு வரை 2021 அக்டோபர் 8 அன்று தெற்கு மத்திய ரயில்வே இயக்கியது.
ரயில்களை ஒன்றிணைத்தது, ரயில் இயக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தி, சராசரி வேகத்தை அதிகரித்ததோடு பிரிவுகளுக்கிடையேயான ஓடும் நேரத்தையும் குறைத்தது.
இரு ரயில்களுமே அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரியை கொண்டு செல்பவையாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762634
-----
(Release ID: 1762779)
Visitor Counter : 237