நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை குறைப்பதற்காக அவற்றின் சேமிப்புக்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்தது
प्रविष्टि तिथि:
10 OCT 2021 12:06PM by PIB Chennai
முக்கிய முடிவொன்றை எடுத்துள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீது சேமிப்பு கட்டுப்பாடுகளை மார்ச் 31, 2022 வரை விதித்துள்ளது.
மத்திய அரசின் முடிவு உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை குறைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.
சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு விலைகளை மேலும் குறைக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களுடனும் இந்த உத்தரவை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
இந்த உத்தரவின் கீழ், அனைத்து சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சேமிப்பு வரம்பை, அந்தந்த மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகம், மாநில/யூனியன் பிரதேசத்தின் இருப்பு மற்றும் நுகர்வு முறையின் அடிப்படையில் விதிவிலக்குகளுடன் முடிவு செய்யும்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் (https://evegoils.nic.in/EOSP/) இணையதளத்தில் சமையல் எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கையிருப்பு தொடர்ந்து பதிவேற்றப்படுவதை மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762631
------
(रिलीज़ आईडी: 1762773)
आगंतुक पटल : 299