பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வாமித்வா பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 06 OCT 2021 3:46PM by PIB Chennai

ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களில் உருவாக்கிய நம்பிக்கை, பயனாளிகளுடனான உரையாடலில் தெளிவாகத் தெரிகிறது. அதை நான் இங்கேயும் பார்க்கிறேன். இந்த திட்டம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டபின், வங்கியிலிருந்து மக்கள் கடன் பெறுவது எளிதாகிவிட்டது.

இத்திட்டத்தை விரைவில் அமல்படுத்த,  மத்தியப்பிரதேசம் கடுமையாக பணியாற்றுகிறது.

 

நண்பர்களே,

ஆரம்ப கட்டத்தில், பிரதமரின் ஸ்வா மித்வா திட்டம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 22 லட்சம் குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் தயாராக உள்ளன. தற்போது இத்திட்டம் இதர மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.  மத்தியப் பிரதேசம் இத்திட்டத்தை விரைவாக அமல்படுத்தியுள்ளது. இன்று மத்தியப் பிரதேசத்தில் 3,000 கிராமங்களைச் சேர்ந்த 1.70 லட்சத்துக்கும் குடும்பத்தினர் சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர். இவைகள் அவர்களுக்கு வளத்தை கொண்டுவரும்.   இவர்கள் தங்கள் சொத்து அட்டைகளை தங்கள் செல்போனில் டிஜிலாக்கர்  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியம். இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். மத்தியப் பிரதேசத்தில் இத்திட்டம் வேகமாக அமல்படுத்தப்படுவதால், இந்த மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும், அனைத்துக் குடும்பங்களும் விரைவில் சொத்துரிமை ஆவணங்களைப் பெறும்.

 

சகோதர மற்றும் சகோதரிகளே

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என அடிக்கடி கூறப்படுகிறது, ஆனால், சுதந்திரத்துக்குப்பிறகும் பல தசாப்தங்களுக்குப் பிறகும், கிராமங்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் சக்தி, நிலம் மற்றும் கிராம மக்களின் வீடுகளை அவர்களின் வளர்ச்சிக்காக முழுவதுமாகப் பயன்படுத்த முடியவில்லை. மாறாக, கிராம நிலங்கள் மற்றும் வீடுகள் மீதான தகராறுகள், சண்டைகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால்   கிராம மக்களின் சக்தி, நேரம், பணம் வீணடிக்கப்பட்டது. இது இப்போதைய பிரச்சினை மட்டும் அல்ல. இப்பிரச்சினை குறித்து மகாத்மா காந்தி, அவரது காலத்தில்   கவலைப்பட்டார்.   இதற்காக குஜராத்தில், நான் முதல்வராக இருந்தபோது ‘சமரச கிராமப் பஞ்சாயத்து திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. உங்கள் பங்களிப்புடன் ஸ்வாமித்வா திட்டம், கிராம ஸ்வராஜின் மாதிரியாக மாறும் என நான் உறுதியுடன் உள்ளேன்.

சமீபத்தில் கொரோனாத் தொற்றை எதிர்த்துப் போராட இந்திய கிராம மக்கள் இணைந்து செயல்பட்டதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் வசிப்பதற்கான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடு செய்தது, வெளியிடங்களில் இருந்து வந்தவர்களுக்கான வேலை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்  இந்திய கிராமங்கள் முன்னணியில் இருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் விடா முயற்சியுடன் பின்பற்றப்பட்டது. எனது நாட்டின் கிராம மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நாட்டை காக்க உதவிய கிராமங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

 

நண்பர்களே,

சொத்து ஆவணங்கள் இல்லாமல் இருப்பது உலகளாவிய பிரச்சினை. இது பற்றி அதிகம் ஆலோசிக்கப்படுவதில்லை. வளர்ந்த நாடுகளுக்கும் இது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

 

நண்பர்களே,

உள் கட்டமைப்புகளை உருவாக்க நிலம் தேவைப்படுகிறது. இதற்கான ஆவணம் தெளிவாக இல்லை என்றால், வளர்ச்சி பணிகள் முடிய தாமதமாகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவேண்டும். அதனால் பிரதமரின் ஸ்வாமித்வா திட்டம், நமது கிராமங்களில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு வலுவானத் தூணாக இருக்கப்போகிறது.

 

நண்பகர்ளே,

ஸ்வாமித்வா திட்டம் சொத்து ஆவணங்கள் வழங்கும் திட்டம் மட்டும் அல்ல, இது வளர்ச்சிக்கான புதிய மந்திரம் மற்றும் இது நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமங்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. 

டரோன்கள் கிராமங்களில் உள்ள வீடுகளை அறிவியல் பூர்வமாக படம்பிடித்து வரைபடங்களை உருவாக்குகின்றன. இதில் எந்த பாகுபாடும் இல்லை. நாட்டில் 60 மாவட்டங்களில், ட்ரோன்கள் இந்தப் பணியை முடித்துள்ளன. இது கிராமப் பஞ்சாயத்துக்கள் மேம்பட உதவும்.

 

சகோதர, சகோதரிகளே,

ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களில் உள்ள ஏழைகளை தற்சார்புடையவர்களாகவும், பொருளாதார ரீதியாக வலிமையானவர்களாவும் மாற்றும். இத்திட்டத்தால்,  3 மாதங்களில், எவ்வாறு பலம் பெற்றார் என்பதை பவான் ஜி தற்போது கூறியதைக் கேட்டோம். அவருக்கு சொந்த வீடு உள்ளது. ஆனால் ஆவணம் இல்லை. தற்போது அவருக்கு சொத்து ஆவணம் இருப்பதால், அவரது வாழ்க்கை மாற்றம் அடைந்து விட்டது. 

ஆவணங்கள் இல்லாமல், வங்கியில் எளிதாக கடன் பெற முடியாது. இந்திய கிராம மக்கள், வங்கி முறைகளுக்கு வெளியே கடன் பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  அதன் வளர்ந்து வரும் வட்டி, அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாகிறது.  இதிலிருந்து கிராம மக்கள் வெளிவர வேண்டும் என விரும்பினேன். இதற்கு ஸ்வாமித்வா திட்டம் முக்கியமானது. கிராம மக்களுக்கு சொத்து ஆவணம் கிடைக்கும்போது, அவர்களால் வங்கியில் எளிதில் கடன் பெற முடியம். இதைப் பயனாளிளின் கலந்துரையாடலில் நாம் கேட்டோம்.

 

நண்பர்களே,

ஏழைகள் மற்றவரை சார்ந்திருப்பதில் இருந்து விடுவிக்க, கடந்த 6-7 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது.  தற்போது, சிறு விவசாயத் தேவைகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசு அலுவலகங்களில் ஏழைகள் அலைந்து திரிந்த காலம் எல்லாம் சென்று விட்டது. தற்போது, அரசு ஏழைகளிடம் வந்து அதிகாரம் அளிக்கிறது. துணை நபரின் உத்திரவாதம் இன்றி, மக்களுக்கு கடன் வழங்குவதில் முத்ரா திட்டம் முன்மாதிரியாக உள்ளது என அவர் கூறினார். கடந்த 6 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு, சுமார் 29 கோடி கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டில்  இன்று 70 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் பணியாற்றுகின்றன, ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்கள் வங்கிக் கணக்கு பெற்றுள்ளனர்.  துணை நபர் உத்திரவாதம் இல்லாமல், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

 

சகோதர சகோதரிகளே!

நமது கிராம மக்கள் பலர், நகரங்களில் சாலையோர வியாபாரிகளாக உள்ளனர். அவர்களுக்கு பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் மூலம் வங்கியிருந்து கடன் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்று 25 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ளனர்.

 

நண்பர்களே!

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள், நோயாளிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் அதிகப் பயன்களைப் பெறும் வகையில், பல கொள்கை முடிவுகள்  எடுக்கப்பட்டுள்ளன.   இந்தியாவில் ட்ரோன் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், அதிக அளவிலான நவீன ட்ரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன மற்றும் முக்கியமான துறையில் இந்தியா தற்சார்புடையதாகுகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்கள் தயாரிக்க விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மென்பொருள் நிபுணர்கள் மற்றும் தொடக்க நிறுவன தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். ‘‘ இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் திறன் ட்ரோன்களுக்கு உள்ளது’’. ட்ரோன்கள் மற்றும் அது தொடர்பான சேவைகள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியாவில் ட்ரோன்கள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்கும். இது வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

 

நண்பர்களே,

புதிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளுடன் விலங்குளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அர்த்தமுள்ள முயற்சிகளுடன், கிராமங்களின் முழு பங்களிப்புடன், அனைவரின் பங்களிப்புடன் கிராமங்களின் முழு ஆற்றலையும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக்குவோம். இங்குள்ள கிராமங்கள் மேம்பட்டால், மத்தியப் பிரசேதம் வலுவடையும், நாடும் வலுவடையும். நவராத்திரி புனித விழா நாளை முதல் தொடங்குகிறது. இது அனைவருக்கும் ஆசிகளை கொண்டு வரட்டும். கொரோனாவிலிருந்து நாடு விரைவில் விடுபடட்டும். இந்த கொரோனா காலத்தில் நாம் கவனமுடன் இருந்து, நமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து செல்வோம். இந்த சிறந்த வாழ்த்துகளுடன் உங்களுக்கு நன்றி!

***



(Release ID: 1762653) Visitor Counter : 173