பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2022-க்கான தேர்வு நட்பு நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
Posted On:
08 OCT 2021 4:26PM by PIB Chennai
தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2022-ல் பங்கேற்கவிருப்பவர்களை தேர்வு செய்யும் நடைமுறை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
25 நட்பு நாடுகளில் தேசிய மாணவர் படை/அதற்கு சமமான இளைஞர் அமைப்புகளில் இருந்து 300 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் 2021 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டன.
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக மேலும் 15 நாடுகளுக்கு இந்த நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரேசில், அர்ஜென்டினா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நைஜீரியா, மொரீஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் மொசாம்பிக் ஆகியவை அந்நாடுகளாகும். 2021 அக்டோபர் இறுதிக்குள் தேர்வு செயல்முறை முடிவடையும்.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 10 இளைஞர்கள் மற்றும் அவர்களின் பயிற்றுனர்கள் என மொத்தம் 300 பேர் குடியரசு தின முகாம்-2022-ல் கலந்து கொள்வார்கள். நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், புவியியல், அரசியல், சாதனைகள் மற்றும் புகழ்பெற்ற ஆளுமைகள் பற்றிய அறிவை ஊக்குவிப்பதற்காக இந்தியா குறித்த வினாடி வினா போட்டித் தேர்வின் போது நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762130
*****************
(Release ID: 1762233)
Visitor Counter : 216