குடியரசுத் தலைவர் செயலகம்
நமது தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் இரண்டிற்குமான அணுகல் ஒன்றிணைந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க முடியும் என நாம் நம்பலாம்: குடியரசுத் தலைவர் திரு கோவிந்த்
Posted On:
07 OCT 2021 6:06PM by PIB Chennai
நமது தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் இரண்டிற்குமான அணுகல் ஒன்றிணைந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க முடியும் என நாம் நம்பலாம் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார்.
கர்நாடகாவின் சாமராஜநகரில் சாமராஜநகர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட கற்பித்தல் மருத்துவமனை திறப்பு விழாவில் இன்று (அக்டோபர் 7, 2021) பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது பார்வையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை அடித்தளங்களை உருவாக்கும் இரண்டு துறைகள் சுகாதாரம் மற்றும் கல்வி என்று குடியரசுத் தலைவர் கூறினார். சாமராஜநகர் மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்த இரண்டையும் தனக்குள் இணைக்கிறது.
பட்டதாரி அளவில் மருத்துவக் கல்வி பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரியான இது, சாமராஜநகர் மாவட்டத்தில் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்கும் ஒரே மருத்துவக் கல்லூரி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
450 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறப்பதன் மூலம், இங்குள்ள வளர்ந்து வரும் திறமைகளுக்கு நடைமுறை அனுபவம் மற்றும் பயிற்சிக்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
அதிநவீன வசதிகள், தீவிர சிகிச்சைக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் இருதயவியல், நரம்பியல் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் கொண்ட இந்த மருத்துவமனை இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761811
(Release ID: 1761861)
Visitor Counter : 213