பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டிற்கான உணவுதானியங்களின் தேவையை நிறைவுசெய்வது எப்போதும் அரசின் முன்னுரிமையாக இருக்கும்
எத்தனால் திட்டம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் என்று வெளியான செய்தி தவறானது
Posted On:
07 OCT 2021 12:27PM by PIB Chennai
மத்திய அரசின் முக்கியமான எத்தனால் திட்டத்தால் நாட்டின் உணவுப்பாதுகாப்பு பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானது. இது உண்மைகளைக் கண்டறியாதது, தீங்கு விளைவிப்பது, உண்மைகளுக்கு மாறானது என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாட்டில் உணவுத் தேவைகளை நிறைவுசெய்வது மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். அதே சமயம் எல்லா வகைகளிலும் எரிசக்தித் தேவைகளை நிறைவுசெய்வதும் முக்கியமானதாகும். எனவே மாறியுள்ள கண்ணோட்டத்தில் உணவுத் தேவைகளை நிறைவுசெய்வது மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். மாறியுள்ள கண்ணோட்டத்தில் “உணவுடன் எரிபொருள்” என்பதாக இருக்கவேண்டுமே தவிர “உணவு எதிர் எரிபொருள்” என்பதாக இருக்கக்கூடாது.
கடந்த ஆறு ஆண்டுகளில் கச்சா பொருள் அடிப்படையிலான (அதாவது கரும்புச்சாறு, சர்க்கரை, கரும்புப் பாகு) உபரி கரும்பை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம், கடனால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை தொழில்துறைக்கு அரசு வெற்றிகரமாக ரூ.35,000 கோடி நிதி வழங்கியுள்ளது. இது கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை முன்கூட்டியே வழங்க உதவி செய்துள்ளது. நடப்புப் பருவத்தில் எத்தனால் உற்பத்தி திட்டத்தால் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்குமேல் நிதி உதவி வழங்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் கால சவாலை சந்தித்துள்ள இந்தத் துறை ஊரகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூ.20,000 கோடி அளவிற்கு அந்நியச்செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் கூடுதலாக ரூ.10,000 கோடி அளவிற்குக் கூடுதல் தாக்கம் ஏற்படக்கூடும். இந்தத் தொகை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு பதிலாக சாமானிய இந்தியர்களுக்குப் பயன்படுவதாக இருக்கும்.
***
(Release ID: 1761850)
Visitor Counter : 178