எரிசக்தி அமைச்சகம்

மின்சந்தை சீர்திருத்தங்களுக்கான கதவு திறக்கப்பட்டது


Posted On: 07 OCT 2021 1:11PM by PIB Chennai

செபி மற்றும் சிஇஆர்சி இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மின் டிரைவேடிவ்களின் ஒழுங்குமுறை அதிகார வரம்பு தொடர்பான பிரச்னைக்கு இறுதித் தீர்வு காணப்பட்டுள்ளதுசெபிக்கும் சிஇஆர்சிக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றம்  இப்பிரச்னைக்கு தீர்ப்பளித்தது.

மின்சார விதிமுறைகளை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு வகையான மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பாக செபி அமைப்புக்கும் சி ஆர் சி க்கும் இடையேயான அதிகார வரம்பு சிக்கலை, 26 அக்டோபர், 2018 அன்று ஒரு குழுவை அமைப்பதன் மூலம், தீர்க்கும் முயற்சியை மின் அமைச்சகம் மேற்கொண்டது.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செபியும், சி இஆர் சி யும்  உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. இதன்படி, சி ஆர் சி விநியோகம் அடிப்படையிலான முன்னோக்கு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும்அதேசமயம் நிதி விதிமுறைகள் செபியால் கட்டுப்படுத்தப்படும்.

இது தொடர்பான தேவையான ஆணைகளை 10.07.2020 அன்று மின்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

இது தற்போதைய நிலையில் இருந்து மின் சந்தையை மேலும் ஆழமாக்கும். 2024-25க்குள் 25% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு அளவில், இப்போதைய நிலவரப்படி உள்ள அளவு, மொத்த அளவில் 5.5% ஆகும்.

மேலும் தகவல்களூக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761701

                                                                                                   ------



(Release ID: 1761818) Visitor Counter : 244