நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ 40,000 கோடியை மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடி

Posted On: 07 OCT 2021 3:04PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை எதிர்கொள்வதற்காக இந்த வருடம் மொத்தம் ரூ 1,15,000 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் (சட்டமன்றங்களுடன் கூடிய) யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் தகவல்களூக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761749

****



(Release ID: 1761817) Visitor Counter : 224