சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
07 OCT 2021 9:19AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.72 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது மிகக் குறைந்த அளவு.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,44,198; கடந்த 204 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.95 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,00,258
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.68 சதவீதம்) கடந்த 104 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.57 சதவீதம்) கடந்த 38 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 57.86 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1761611
*******
ஸ்ரீ
(Release ID: 1761634)
Visitor Counter : 163