அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
75 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
06 OCT 2021 5:16PM by PIB Chennai
75 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்காக நாடு முழுவதும் பிரத்தியேகமாக அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், கடந்த இரு வருடங்களில் 20 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் (பட்டியல் பிரிவினருக்கு 13, பழங்குடியினருக்கு 7) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவற்றின் மூலம் 20,000 பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த மக்கள் பல்வேறு துறைகளில் பலனடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நலிவுற்ற பிரிவினருக்கு வழிகாட்டி, சமுதாயத்தின் இதர பிரிவினருக்கு இணையாக அவர்களை மேம்படுத்துவதற்கான பிரதமரின் லட்சியத்தை சார்ந்து 75 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்காக அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திரு சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761463
----
(Release ID: 1761578)
Visitor Counter : 296