தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரசார் பாரதி நெட்வொர்க்கில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் மாபெரும் ஒளிபரப்பு
Posted On:
06 OCT 2021 3:46PM by PIB Chennai
2021 டி-20 உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில், பிரசார் பாரதி நெட்வொர்க் அதை முழுமையாக ஒளி(லி)பரப்பவுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை கருத்தில் கொண்டு, நேரடி போட்டிகள், வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ‘மெகா கவரேஜை’, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளன.
அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அகில இந்திய போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் டிடி ஃபிரீடிஷில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அக்டோபர் 23 முதல், அகில இந்திய வானொலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து போட்டிகளின் நேரலை வர்ணனையை ஒலிபரப்பும்.
தூர்தர்ஷனில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண்பதை மிகவும் உற்சாகமான அனுபவமாக மாற்றும் விதத்தில், மக்கள் பங்கேற்புடன் கூடிய பல நிகழ்ச்சிகளை டிடி ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. ‘கிரிக்கெட் லைவ்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில், சாதாரண மக்கள், கேப்டனின் நிலையில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
‘ஆர்ஜேஸ் கா கிரிக்கெட் ஃபண்டா’ என்பது மற்றொரு சுவாரசியமான விவாத நிகழ்ச்சியாகும், இதில் அகில இந்திய வானொலி ஜாக்கிகள், கிரிக்கெட் நிபுணர்களுடன் இணைந்து டிடி ஸ்போர்ட்ஸில் பொதுமக்களுடன் உரையாடுவார்கள். தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒருங்கிணைப்பின் சிறந்த உதாரணமாகவும், புதுமையாகவும் பிரசார் பாரதியின் இந்த முன்முயற்சி இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761415
------
(Release ID: 1761560)
Visitor Counter : 230