திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஸ்கில் இந்தியாவின் ‘தேசிய பயிற்சி திருவிழா’ 2021 -ல் 51,000 -க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்

Posted On: 06 OCT 2021 7:00PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 660-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பயிற்சி திருவிழாவை பயிற்சி தலைமை இயக்குநரகம் மற்றும் தேசிய திறன் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் ஆதரவோடு ஸ்கில் இந்தியா நடத்தியது.

மின்சாரம், சில்லரை வர்த்தகம், தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணு மற்றும் வாகன தயாரிப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் 51,991 பயிற்சியாளர்களுக்கு பணி கிடைத்தது.

மேலும், வெல்டர், எலக்ட்ரீசியன், வீட்டு பராமரிப்பு, அழகு கலை, மெக்கானிக் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைத்தது.

இத்திருவிழாவிற்கு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாகவும், சந்தைக்கு தேவைப்படும் திறன்களை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவதற்கான நமது உறுதியை இது வெளிப்படுத்தியது என்றும் திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைதல் அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் கூறினார்.

5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளவர்கள், ஐடிஐ மாணவர்கள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தொழில் பயிற்சியில் நாடு முழுவதும் அதிக பங்கேற்பை ஊக்கப்படுத்துவதற்காக பயிற்சி விதிகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761516

-----



(Release ID: 1761550) Visitor Counter : 266