குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விரைவான நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பு என்ற குடியரசு துணைத்தலைவர், மக்களை மையப்படுத்திய நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்

Posted On: 06 OCT 2021 2:36PM by PIB Chennai

விரைவான நகரமயமாக்கலை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, மக்களை மையப்படுத்திய நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

"குடிநீர் வழங்கல், கழிவுநீர் இணைப்புகள், வீட்டுவசதி மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் நமது நகரங்கள் நகர்ப்புற ஏழைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரங்கள் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.

திரிபுரா அரசால் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று பேசிய திரு நாயுடு இவ்வாறு கூறினார். அகர்தலா நகரத்தின் சாலைகளை ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

எந்தவொரு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்ல சாலை இணைப்பு வசதிகள் ஒரு முக்கிய தேவை என்பதை வலியுறுத்திய அவர், வடகிழக்கு மாநிலங்களை பொருத்தவரை இது இன்னும் அவசியம் என்று கூறினார்.

முதலீடுகள் அதிகளவில் வருவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிக்கவும் நேரடி மற்றும் டிஜிட்டல் இணைப்புகள் பயன்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், அகர்தலா நகருக்குள் உள்ள சாலைகள் மற்றும் தலைநகரை அதன் புறப்பகுதியுடன் இணைக்கும் சாலை ஆகியவை ரூ 439 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தப்படும்.

இந்த திட்டம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அகர்தலாவில் வசிப்பவர்களுக்கு சிறந்த விளக்குகள், நடைப்பாதைகள், தகவல் பலகைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் நடைபாதை ஆகியவற்றின் மூலம் சிறந்த வசதிகளை வழங்கும். "இந்த வளர்ச்சி நடவடிக்கைகள் வெள்ளத்தை தடுத்தல் மற்றும் காற்றின் தரத்தை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்" என்று திரு நாயுடு கூறினார்.

ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் கீழ் வடகிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்த ஊக்கத்தை பயன்படுத்தி மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க திரிபுரா அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது என்று திருப்தி தெரிவித்தார்.

*******



(Release ID: 1761506) Visitor Counter : 181