பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகளை திரு.ஹர்தீப் சிங் பூரி விநியோகித்தா

Posted On: 05 OCT 2021 6:05PM by PIB Chennai

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகளை திரு.ஹர்தீப் சிங் பூரி இன்று விநியோகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பூரி கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு இணைப்புகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு 14 கோடியாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 30 கோடியாக உள்ளன என்று கூறினார். 2016ம் ஆண்டு மோடி அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எட்டு மாதங்களிலேயே 8 கோடி இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் அதிகம் தேவைப்படும் குடும்பங்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கும்பணி நடைபெற்றுவருகிறது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு.கவ்ஷல் கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1761170

 

***



(Release ID: 1761212) Visitor Counter : 244


Read this release in: English , Urdu , Hindi , Punjabi