வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழிற்பூங்கா மதிப்பீட்டு அமைப்பு அறிக்கையில் 41 தொழிற்பூங்காக்கள் முதன்மையானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன

Posted On: 05 OCT 2021 4:54PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் இன்று வெளியிடப்பட்ட தொழிற்பூங்கா மதிப்பீட்டு அமைப்பு அறிக்கையில் 41 தொழிற்பூங்காக்கள் முதன்மையானவையாக (லீடர்ஸ்) அடையாளம் காணப்பட்டுள்ளன. 90 பூங்காக்கள் சேலஞ்சர் பிரிவின் கீழும் 185 ‘ஆஸ்பைரர்ஸ்’ (வளரத்துடிக்கும்) பிரிவிலும் மதிப்பிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள முக்கிய அளவுருக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்பூங்கா மதிப்பீட்டு அமைப்பின் இரண்டாவது பதிப்பு வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சோம் பிரகாஷ், ஐபிஆர்எஸ் 2.0 அறிக்கை இந்தியாவின் தொழில் போட்டித்தன்மையை மேம்படுத்தி முதலீட்டை ஈர்க்கும் என்றார்

"தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்காக குறிப்பாக கொவிட் -19 பெருந்தொற்றின் போது பல கொள்கை நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் மூலம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை தொடர்ந்து மேம்படுத்தி, முன்னணி முதலீட்டு இடமாக இந்தியா தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டிருப்பதால், இந்த மதிப்பீட்டு நடவடிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கை இந்திய தொழில்துறை நில வங்கியின் விரிவாக்கமாகும் என்றும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடத்தை அடையாளம் காண உதவுவதற்காக ஜிஐஎஸ்-செயல்படுத்தப்பட்ட தரவுத்தளத்தில் 4,400 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை நில வங்கி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில் சார்ந்த ஜிஐஎஸ் அமைப்புடன் இந்த போர்டல் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள மனை வாரியான தகவல்கள் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

"2021 டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் இதை செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761135

-----



(Release ID: 1761171) Visitor Counter : 259